"NTO App"
அறிவிப்புகளை அனுப்ப விரும்புகிறது
அறிவிப்புகளில் விழிப்பூட்டல்கள், ஒலிகள் மற்றும் ஐகான் பேட்ஜ்கள் இருக்கலாம்.

அன்னையர் தினம் – 2026

வகை: Announcements | Date: April 14, 2026





அன்பார்ந்த உறவுகளே,


நிட்வால்டன் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள அன்னையர் தின விழாவிற்கு தங்களை மற்றும் உங்கள் குடும்பத்தினரை அன்புடன் அழைக்கிறோம்.


திகதி: 10-05-2026 (ஞாயிற்றுக்கிழமை)

இடம்: Kath. Pfarramt, Knirigasse, 6370 Stans

நேரம்: 14.00 மணி தொடக்கம் 18.30 மணி வரை


இந்த நிகழ்வில்


அன்னையரை கௌரவிக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள்

பாடல்கள், நடனங்கள் மற்றும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள்

சிறப்பு உரைகள்

பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள்


போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெறும்.


கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தங்கள் விபரங்களை முன்கூட்டியே வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


அன்னையர் தினத்தை சிறப்பாகக் கொண்டாட அனைவரையும் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


நன்றி


நிட்வால்டன் தமிழர் ஒன்றியம்

Nidwalden, Switzerland


TA EN DE