முத்தமிழ் விழா & 10ஆம் ஆண்டு நிறைவு விழா – 2027
நிகழ்வு தேதி: Sun, 21 Feb 2027
அன்புடையீர்,
வணக்கம். எமது நிட்வால்டன் தமிழர் ஒன்றியத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் முத்தமிழ் விழா எதிர்வரும் 21.02.2027 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மிக விமர்சையாக நடைபெறவுள்ளது.
எமது தமிழ் மொழி, பண்பாடு மற்றும் கலைச் செல்வங்களைப் பேணிப் பாதுகாக்கவும், எமது சமூகத்தின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில், அனைவரும் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வருகை தந்து விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
📅 திகதி: 21.02.2027 (ஞாயிற்றுக்கிழமை)
⏰ நேரம்: காலை 10:30 மணி முதல்
📍 இடம்: Mehrzweckanlage Steini, Stettlistrasse 1a, 6383 Dallenwil, Switzerland
சிறப்பு அம்சங்கள் & கலை நிகழ்ச்சிகள்:
🎭 கலாச்சார நடனங்கள் & இசை நிகழ்ச்சிகள்
🎤 பேச்சு, கவிதை & நாடகங்கள்
🏆 10 ஆண்டு காலச் சேவைகளுக்கான கௌரவிப்பு
🍲 வருகை தரும் அனைவர்க்கும் இலவச மதிய உணவு மற்றும் சுவையான சிற்றுண்டிகள் (Gratis Lunch & Drinks)
அனுமதி முற்றிலும் இலவசம்!
(Eintritt frei – அனைத்து தமிழ் நெஞ்சங்களையும் அன்போடு அழைக்கின்றோம்!)
📲 தொடர்புகளுக்கு:
📞 தொலைபேசி: 076 830 31 41 / 076 496 53 49
📧 மின்னஞ்சல்: nto.swiss@gmail.com
நன்றியுடன்,
நிட்வால்டன் தமிழர் ஒன்றியம் (NTO)
தமிழால் இணைவோம்! கலை, கலாச்சாரத்தால் உயர்வோம்
